ஜும்ஆவின் சிறப்புகள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்!

வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல அல்லாஹ்வை போற்றி ஆரம்பம் செய்கிறேன்.

இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ( ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக யா அல்லாஹ்!

இங்கே கொடுக்கப்பட்ட தலைப்பு?

🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏
ஜும்ஆவின் சிறப்புகள்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்குரிய நாள்
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
''இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில்முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள்அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம்வழங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகுவேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை,அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும்.ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை)கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்கள்: புகாரி 3486, முஸ்லிம் 1414

மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை

"உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள்வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபிபடைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர்கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல்நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும்.எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தைஅதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம்எடுத்துக் காட்டப்படுகின்றது'' என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே!எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக்காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்துவிட்டிருப்பீர்களே!'' என்று நபித்தோழர்கள் கேட்டபோது, ''நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின்உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்துவிட்டான்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ்,

நூல்: அபூதாவூத் 883

ஜும்ஆ தொழுகைக்காகக் குளித்தல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமை(ஜுமுஆ) தினத்தில் குளிப்பது, பருவமடைந்தஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி),

நூல்: புகாரி 858

ஜும்ஆ தொழுகைக்கு ஒரு பாங்குதான்

தவ்ஹீத் பள்ளிவாசல்களைத் தவிர உள்ள சுன்னத்ஜமாஅத் பள்ளிகள் என்று கூறப்படுபவற்றில் ஜும்ஆதொழுகைக்கு இரண்டு பாங்குகள் கூறுகின்றனர். இதுநபிவழிக்கு எதிரான செயலாகும். அனைத்துதொழுகைகளுக்கும் ஒரு பாங்கு கூறுவதைப் போல்ஜும்ஆ தொழுகைக்கும் ஒரு பாங்குதான் கூறவேண்டும்.

நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி),உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் ஜுமுஆநாளின் முதல் பாங்கு இமாம் சொற்பொழிவு மேடைமீது அமர்ந்ததும் சொல்லப்பட்டு வந்தது.

அறிவிப்பவர்: சாயிப் பின் யஸீத் (ரலி),

நூல்: புகாரி 912

ஜும்ஆ பாங்கு கூறப்பட்டால் வியாபாரம் கூடாது

ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல்முஸ்லிமல்லாத நபர்கள் மூலமோ ஜும்ஆகடமையாகாத பெண்கள் மற்றும் சிறுவர்கள்மூலமோ வியாபாரத்தை தொடர்ந்து கொண்டுதாங்கள் மட்டும் தொழுகைக்கு வந்து விடுகின்றனர்.இதுவே அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பது என்றும்இவர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இந்தக் கருத்து முற்றிலும் தவறாகும். இதுகுறித்து அல்லாஹ் கூறுவது இது தான்.

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில்தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வைநினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தைவிட்டுவிடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவேஉங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும்பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத்தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்!நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

திருக்குர்ஆன் 62:9,10

பாங்கு சொல்லப்பட்டவுடன் தொழுகைக்கு விரைந்துவாருங்கள் என்று மட்டும் அல்லாஹ் கூறினால்மற்றவர் மூலம் நம் வியாபாரத்தை நடத்தச் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்ய முகாந்திரம்உண்டு. ஆனால், அல்லாஹ்வை நினைப்பதற்குவிரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள் என்றுஇரண்டு கட்டளைகளை அல்லாஹ் விதிக்கிறான்.அல்லாஹ்வை நினைப்பதற்கு விரைவது ஒருகட்டளை. வியாபாரத்தை விட்டுவிடுவது மற்றொருகட்டளை. இரண்டையும் நாம் கடைப்பிடிப்பதுகடமையாகும். மற்றவர் மூலம் கூட அந்த நேரத்தில்வியாபாரம் செய்யக் கூடாது.

மேலும் தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில்அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்என்றும் அல்லாஹ் கூறுகிறான். தொழுகைமுடிக்கப்பட்ட பிறகு தான் பொருளீட்ட வேண்டும்என்று அல்லாஹ் கூறுகிறான். தொழுகைமுடிக்கப்படும் முன்னர் நமது வியாபார நிறுவனம்இயங்கினால் அப்போது நாம் பொருளீட்டுவதாகத்தான் பொருள்.

ஜும்ஆவுக்கு பாங்கு சொன்னது முதல் தொழுகைமுடியும் வரை தொழுகைக்கு விரையவும் வேண்டும்.எல்லாவிதமான வியாபாரத்தையும் நிறுத்திக்கொள்ளவும் வேண்டும்.

நான் வியாபாரம் செய்யவில்லையே; எனதுநிறுவனத்தில் மற்றவர்கள் தானே வியாபாரம்செய்தார்கள் என்று கூறும் காரணம் ஷைத்தானின்ஊசலாட்டமாகும். இதில் இறையச்சம் சிறிதும்இல்லை. மனசாட்சிக்கும் உலக நடைமுறைக்கும்இது எதிரானதாகும்.

நம்முடைய நிறுவனத்தில் மற்றவர்கள் செய்தவியாபாரம் மூலம் நமக்குக் கிடைக்கும்லாபத்துக்கும் வருமானத்துக்கும் நான் வரி செலுத்தமாட்டேன் என்று அரசாங்கத்திடம் இது போல்கூறுவார்களா? கூறினால் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா? அல்லது அந்த வருமானம்எங்களுடையது அல்ல எனக் கூறுவார்களா?

நாம் இல்லாத போது நம்முடைய ஊழியர் நம்அனுமதியுடன் கலப்படமோ மோசடியோ செய்தால்அதை நான் செய்யவில்லை என்று கூறுவதையாருடைய மனசாட்சியாவது ஒப்புக் கொள்ளுமா?

நாமே செய்வதும் நம்முடைய அனுமதியின் பேரிலும்உத்தரவின் பேரிலும் மற்றவர் செய்யும்காரியங்களும் நாம் செய்ததாகத் தான் பொருள்.நமக்குச் சொந்தமான நிறுவனத்தில் மற்றவர்களைவைத்து நடத்தும் வியாபாரமும் நாம் செய்ததாகத்தான் அர்த்தம்.

எனவே முற்றிலுமாக வியாபாரத்தை ஜும்ஆ பாங்குமுதல் ஜும்ஆ தொழுகை முடியும் வரை நிறுத்தியாகவேண்டும்.

ஜும்ஆ தொழுதால் பாவங்கள் மன்னிக்கப்படும்

''ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும்பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும்.ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்டநேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும்.ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது''என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 342, திர்மிதி 198

ஜும்ஆ தொழுகைக்கு முன் செய்ய வேண்டியவை

''ஜும்ஆ நாளில் குளித்து விட்டு இயன்ற வரைசுத்தமாகித் தமக்குரிய எண்ணையைத் தேய்த்துக்கொண்டு தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக்கொண்டு பள்ளிக்கு வந்து (வரிசையில் நெருக்கமாகஅமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு,இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடிமவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்தஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள்மன்னிக்கப்படுகின்றன'' என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸி (ரலி),

நூல்: புகாரி 883

முஸ்லிமில் அபூஸயீத் (ரலி) அறிவிக்கும் 1400வதுஹதீஸில், இதே கருத்துடன் 'பல் துலக்குதல் என்றவார்த்தை இடம் பெறுகின்றது. அபூதாவூதில் அம்ர்பின் அல்ஆஸ் (ரலி) அறிவிக்கும் 293வது ஹதீஸில்இதே கருத்துடன், 'நல்லாடை அணிதல்' என்றவார்த்தையும் இடம் பெறுகின்றன.

மேற்கண்ட ஹதீஸில் இருந்து பெறப்படும்ஜும்ஆவின் ஒழுங்குகள்:

1. ஜும்ஆ நாளில் பல் துலக்குதல் 2. இயன்ற வரைநன்றாகச் சுத்தமாகக் குளித்தல் 3. தலைக்குஎண்ணை தேய்த்தல் 4. நறுமணத்தை பூசிக்கொள்ளுதல் 5. நம்மிடம் இருக்கும் ஆடைகளில்சிறந்த ஆடையை அணிதல் 6 பள்ளிவாசலில்நெருக்கமாக இருக்கும் இரண்டு நபர்களை பிரிப்பதுகூடாது 7. இமாம் உரையாற்ற ஆரம்பிக்கும் வரைதம்மால் இயன்ற அளவு இரண்டிரண்டுரக்அத்துகளாகத் தொழுதல் 8. இமாம் உரையாற்றும்போது மவுனமாக இருத்தல்.

முன்கூட்டியே பள்ளிக்கு வருவதன் சிறப்புகள்

''ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப்போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒருஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானிகொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில்வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர்போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால்கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர்போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒருகோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானிகொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்கு வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக்கேட்கின்றார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 881

முந்தி வருபவரை பதிவு செய்யும் மலக்குமார்கள்

''ஜும்ஆ நாள் வந்ததும் பள்ளியின் பாகங்களில்உள்ள ஒவ்வொரு வாசலிலும் மலக்குகள்நிற்கின்றனர். முதன் முதலில் வருபவரை - அடுத்துவருபவரைப் பதிவு செய்கின்றனர். இமாம் (மிம்பரில்)உட்கார்ந்ததும் தங்கள் ஏடுகளைச் சுருட்டிக் கொண்டுஉரையைக் கேட்க வந்து விடுகின்றனர்'' என்றுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1416

நம்முடைய பெயர்கள் வெள்ளியன்று பள்ளிக்குவரும் மலக்குகளின் பதிவேட்டில் பதியப்படவேண்டுமெனில் இமாம் மிம்பரில் ஏறுவதற்குமுன்பே பள்ளிக்கு வந்தாக வேண்டும்.

ஓராண்டு நோன்பு நோற்று, நின்று வணங்கிய கூலி

"யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்பநேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து,இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையைசெவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல்இருக்கின்றரோ அவருக்கு, அவர் எடுத்து வைக்கும்ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்புநோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு''என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி),

நூல்: நஸயீ 1381

இமாம் உரையாற்றும் போது பேசக்கூடாது

"இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன்அருகிலிருப்பவரிடம், 'வாய் மூடு' என்று கூறினால் நீவீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்'' என்றுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 934

இமாம் உரையாற்றும் போது விளையாடக்கூடாது

"யார் (தரையில் கிடக்கும்) கம்பைத் தொ(ட்டுவிளையா)டுகின்றாரோ அவர் (ஜும்ஆவை) பாழாக்கிவிட்டார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1419

ஜும்ஆவிற்கு வரும் நல்லவர்களும் கெட்டவர்களும்

மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள்.ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போதுபேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரதுஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும்.இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்துபிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும்,கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம்பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால்அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு(கொடுக்காமல்) தடுக்கின்றான். மூன்றாமவர்ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய்பொத்தியுமிருந்தார். எந்த ஒரு முஸ்லிமின்பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவுகொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்துவரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள்வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும்.ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்தியஅல்லாஹ், "நன்மை செய்தவருக்கு அது போன்றபத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர் தீமைசெய்த அளவே தண்டிக்கப்படுவார்'' என்று (6:160வசனத்தில்) கூறுகின்றான் என நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: அபூதாவூத் 939

இந்த மூன்று பேர் பட்டியலில் நாம் முதலாமவர்பட்டியலில் இடம் பெற்று ஜும்ஆவின் பலனைஇழந்து விடக் கூடாது.

ஜும்ஆ தொழாதவர்களுக்கான தண்டனை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவுமேடையின் படிகள்மீது நின்றபடி "மக்கள்ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்துவிலகியிருக்கட்டும்! அல்லது அவர்களின் இதயங்கள்மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகுஅவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்'' என்றுகூறியதை நாங்கள் கேட்டோம்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1570

"அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டுவிட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ்முத்திரையிட்டு விடுகின்றான்'' என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல் ஜஃது (ரலி)
நூல்: திர்மிதி 460

ஜும்ஆ தொழுகைக்கு வராதவர்களுக்கு எச்சரிக்கை

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையில்கலந்துகொள்ளாத சிலர் குறித்து, "நான் ஒருமனிதரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறுகூறிவிட்டு, பின்னர் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் (வீட்டில்) இருப்பவர்களை (நோக்கிச்சென்று அவர்களை) வீட்டோடு சேர்த்து எரித்து விடவேண்டும் என எண்ணியதுண்டு'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம் 1156

பெண்களும் ஜும்ஆவிற்கு வருதல்

நான் வெள்ளிக்கிழமை அன்று "காஃப் வல்குர்ஆனில்மஜீத்' எனும் (50ஆவது) அத்தியாயத்தைஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்வாயிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ(சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தைஓதுவார்கள்.

அறிவிப்பவர்: அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரலி)அவர்களின் சகோதரி
நூல்: முஸ்லிம் 1580

மேற்கண்ட ஹதீஸில் ஒரு பெண்மனி ஜும்ஆவில்கலந்து கொண்டு, நபியவர்கள் ஜும்ஆ பயானில்என்ன பேசினார்கள் என்பதைக் கேட்டுள்ளார்.இதிலிருந்து பெண்களும் ஜும்ஆ தொழுகைக்குவரலாம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்!

அனைவரும் படிக்க வேண்டும் மற்றவர்களுக்கு எத்தி வைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்!

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

Comments

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்