Posts

Showing posts from August, 2017

இந்திய வரலாற்றின் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட பக்கங்களை, மிக அழகிய முறையில்...

Image
இந்தியப் பிரிவினை: இன்னொரு சாட்சியம் இந்திய வரலாற்றின் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட பக்கங்களை, மிக அழகிய முறையில்... மவ்லானா அபுல் கலாம் ஆசாத் எழுதிய ''INDIA WINS FREEDOM''(இந்திய விடுதலை வெற்றி) நூலிலிருந்து சில பகுதிகள் நான் சொல்ல விரும்பிய வரலாற்றின் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டேன். 1947 ஆகஸ்ட்14-ம் தேதி பாகிஸ்தான் டொமினியனை (ஆட்சிப் பரப்பை) தொடங்கிவைப்பதற்காக லார்ட் மவுண்ட்பேட்டன் கராச்சிக்குச் சென்றார். மறுநாள் இந்தியாவுக்கு அவர் திரும்பி வந்தார். 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு 12 மணிக்கு இந்திய டொமினியன் பிறந்தது. தேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது. ஆனால் விடுதலை வெற்றி உணர்ச்சிகளை மக்கள் முழுவதும் அனுபவித்து மகிழ்வதற்கு முன் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒரு மகத்தான சோக அனுபவம் தமக்குக் காத்திருந்ததை உணர்ந்தனர். நாம் நிம்மதியாக சுதந்திரத்தின் பயன்களை அனுபவிப்பதற்கு முன் தொல்லைகள் நிறைந்த காரியங்களை நீண்ட காலம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தோம். ஏன் ஒப்புக்கொண்டார்கள்? ஒரு விஷயம் இந்தக் கட்டத்தில் எழுவது இயல்பு. எல்லா இந்தியர்களின் மனதிலும் பிரிவினையானது கோப

வீரப் பெண்மணி பேகம் ஹஜ்ரத் மஹல்

Image
வீரப் பெண்மணி பேகம் ஹஜ்ரத் மஹல் ஆங்கிலேயரை எதிர்த்து வீர சுதந்திரம் வேண்டி நின்ற வீரப் பெண்களின் வரலாற்றுப் பட்டியலை வரிசைப் படுத்தும்போது நிச்சயமாக பேகம் ஹஜ்ரத் மஹலுக்கு முக்கிய இடமுண்டு.. ஆண்களை தைரிய புருஷர்கள் என்று வர்ணிக்கும் வரலாறுகளுக்கும் சமூகத்துக்கும் மத்தியில் மனத்தெளிவுடன் கூடிய தைரியம் கொண்ட ஒரு முஸ்லிம் பெண்மணி அடக்கு முறைக்குப் பணியாமல் ஆசை வார்த்தைகளுக்கு உடன்படாமல் வாழ்ந்து காட்டினார் என்றால் அவர் பேகம் ஹஜ்ரத் மஹல் ஆகும். இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் புல்லரிக்க வைப்பதுடன் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த இந்தப் பெண்மணியை நினைத்து இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிம்களையும் தலை நிமிரவும் செய்கிறது. (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் செல்லும் ஹஜ்ரத் மஹலின் வீரம் - தேசாபிமானம் - தியாக அர்ப்பணிப்பு பற்றிப் பார்க்கலாம். 1857 - இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக இப்படி ஒருங்கிணைந்த போது, அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். அவர்களில் ஒருவர் ஜான்சிராணி லக்கு