Posts

Showing posts from August, 2015

"ஸஜ்தா " என்னும் சிரம் பணிதல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே

Image
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹூ அல்ஹம்துலில்லாஹ் 🌷 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 ஸஜ்தா" என்னும் சிரம் பணிதல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 தொழுகை என்னும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இறை வணக்கத்தின் ஓர் அங்கமாகிய ஸஜ்தா என்னும் சிரம் பணிதலைச் சிலர் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்குச் செய்கின்றனர். அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்து வணங்குங்கள். (திருக்குர்ஆன் 53:62) இரவில் அவனுக்கு ஸஜ்தாச் செய்வீராக! நீண்ட இரவு அவனைத் துதிப்பீராக! (திருக் குர்ஆன் 76:28) ஸஜ்தா என்னும் சிர வணக்கம் தனக்கு மட்டுமே உரியது, என்று அல்லாஹ் உரிமை கொண்டாடும் போது, பெரியார்களுக்கும், மகான்களுக்கும், இறந்து போன நல்லடியார்களின் கப்ருகளுக்கும், ஸஜ்தாச் செய்கின்றனரே! இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன? மார்க்கம் அறியாத பாமர மக்கள் சிலர் தங்கள் ஆன்மீக வழிகாட்டிகளாகக் கருதும் ஷெய்கு மார்களுக்கு மரியாதை செய்வதாக நினைத்துக் கொண்டு அறியாமையால் அவர்களின் கால்களில் விழுந்து வணங்குகின்றனர். ஸஜ்தா என்னும் சிர வணக்கம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதை அந்தப் பாமர மக்கள் அறியாதிருக்கலாம். தங்க