புன்னகை,முகமலர்ச்சி, நற்குணம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்!

வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல அல்லாஹ்வை போற்றி ஆரம்பம் செய்கிறேன்.

இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ( ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக யா அல்லாஹ்!

இங்கே கொடுக்கப்பட்ட தலைப்பு?

❤💟💜💖💚💚💙💛💛❤💟💜💖💖💚
புன்னகை ,முகமலர்ச்சி ,நற்குணம் !
❤💟💜💖💖💚💙💙💛❤💟💜💖💖💚

அல்லாஹு தஆலா  கூறுகிறான் : நிச்சயமாக நபியே! நீங்கள் மாபெரும் நற்குணத்தில் மீது உள்ளீர் .            (அல்குரான் 68:4)

...........(அவர்கள் எத்தகையோரென்றால்)கோபத்தை மென்று விழுங்கி விடுபவர்கள்,மக்களை மன்னிப்பவர்கள் ....                    (அல்குரான் 3:134)

ஹதீஸ்

ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ,மக்களில் மிக அழகிய குணமுடையவர்களாக விளங்கினார்கள் .         (புகாரி,முஸ்லிம்)

ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:நபி (ஸல்) அவர்கள் தீமையைச் செய்பவர்களாகவோ ,சொல்பவர்களாகவோ தீமையை நாடகூடியவர்கலாகவோ இருந்ததில்லை .அவர்கள் சொல்வார்கள் :உங்களில் மிகச் சிறந்தவர்கள் ,அழகான குனமுடையவர்களே!                 (புகாரி,முஸ்லிம்)

ஹஜ்ரத் அபுத் தர்தாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள் :அண்ணல் நபி (ஸல்) கூறினார்கள் :கியாமத் நாளில் முஃமினான மனிதனின் ,, மீஜான் ,, தராசில் மிகக் கனமாக இருப்பது ,நற்குனத்தைத் தவிர வேறில்லை .நிச்சயமாக அல்லாஹ் தவறான பேச்சுகளை பேசும் ,தீய செயல்களைச் செய்யும் மனிதனைக் கோபிக்கிறான் . (திர்மிதி)

நற்குணத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ,நிறைய ஹதீஸ்கள் உள்ளன ,இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் .....
ஒருவர் முக மலர்ச்சியுடன் இருப்பது ,முஸ்லிம் சகோதரரை புன்னகையுடன் ,முகமலர்ச்சியுடன் பார்ப்பது , நன்மையான காரியம் !

சிரித்த முகத்துடன் இருப்பது , புன்னகை யுடன் காண்பது ,அதற்க்கு ஒரு சிறிய கதை ....
இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?"

"ஐந்து வருஷமா இருக்கேங்க!"
"நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்ளோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட பயணிகள் கிட்ட நடந்துக்கிற உங்கள மாதிரி கண்டக்டரை பார்த்ததே இல்லை"
"தொழில்ல எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணும் சார். அமெரிக்காவுல உள்ள 'நியூரோசைக்யட்ரிக்' நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?"
"என்ன சார் சொல்றாங்க?"
"மனுஷன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா இருக்கும் போது உடம்புல ஒருவித அலைகளை உண்டாக்கி, நியூரோ பெப்டைடுகளை உண்டாக்குமாம். இது உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்படிப்பட்டவங்க தான் அதிக நாள் ஆரோக்கியமா வாழுறாங்களாம். அதுமட்டுமில்ல...பொறாமை, ஆசை, கோபம் எல்லாத்தையும் கட்டுப்படுத்தினா, ஆயுள் இன்னும் கூடும்னு ஆய்வுகள் சொல்லுது. உயிர் போற நேரத்துல கூட பதட்டப்படக் கூடாது சார்"
"அடேங்கப்பா...இவ்ளோ தெரிஞ்சி வச்சிருக்கறதால தான் நீங்க எப்பவும் பதட்டப்படாம சிரிச்ச முகத்தோட வேலை செய்யிறீங்க போல!"
"ஆமாங்க!"
"ஆனா உங்க கிட்ட இருக்குற இந்த நிதானம் உங்க டிரைவர் கிட்ட இல்லைன்னு நினைக்கிறேன்"
"ஏன் அப்படி சொல்றீங்க?"
"இப்ப இந்த பஸ் எப்படி போய்க்கிட்டு இருக்குன்னு பாருங்களேன். தாறுமாறா தறிகெட்டு ஓடுற மாதிரி தெரியுது. நீங்களாவது முன் பக்கம் போய் பிரேக்-கிரேக் கழண்டு விழுந்துடுச்சான்னு பாத்துட்டு வாங்களேன், ப்ளீஸ்!"
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்கே போய் பாத்துட்டு வந்து தான் உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேன். வர்ற வழியில தான் எங்கயோ விழுந்திருக்கணும்னு நினைக்கிறேன்!"
"எது...பிரேக்கா?"
"இல்ல...டிரைவர்!"
பயணி: ?????

அல்லாஹ் நம் அனைவரையும் நற்குனமுள்ளவர்களாக வாழச் செய்வானாக ,அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிப்படி நடக்க உதவியும் ,நற்கிருபையும் செய்வானாக ,சுவர்கத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் இருக்க தௌபீக் செய்வானாக ...ஆமீன் ........

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்!

Comments

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்