Posts

Showing posts from July, 2017

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்

தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் . மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார். மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். வருடங்கள் கடந்தன. ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது. மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார். தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள். “உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “ இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை. காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன். இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன். எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார். மகன் ஆச்சரியப்பட்டான். “பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன். ஒருநாள் கூட இப்படி ஒரு குறை

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

Image
சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க! உங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை உங்கள் இயற்கை உபாதையை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம். பொதுவாக உங்கள் சிறுநீரில் ஏற்படும் மாற்றத்தை வைத்து எளிதாக உங்கள் உடல்நல மாற்றத்தை கண்டறிந்துவிடலாம். உடல்நிலை சரியில்லை எனும் போது முதலில் சிறுநீர் பரிசோதனை செய்வதற்கு காரணமும் இதுதான். நாட்டு வைத்தியம் செய்பவர்கள் கூட சிறுநீரின் நிறத்தை வைத்தே என்ன பாதிப்பாக இருக்ககூடும் என்பதை கணித்துவிடுவார்கள். எனவே, நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது அண்ணாந்து விட்டத்தை பார்ப்பதை தவிர்த்து சிறுநீரின் நிறம் சரியாக தான் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியது அவசியம். 01. மந்தமாக வெளியாகுதல். உங்கள் சிறுநீர் மந்தமாக வெளிப்படுகிறது என்றால் அது உங்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான முன்னறிவுப்பு ஆகும். வெள்ளை இரத்த அ

நாவல்பழம்

Image
நலம் தரும் நாவல்பழம் “ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் நாவல் பழ சீசன்தான். நாவல் பழத்தில் கல்சியம் அதிக அளவில் இருக்கிறது. இந்தப் பழத்தை அடுத்து சீதா பழத்தில்தான் கல்சியம் இருக்கிறது. இது தவிர சோடியம், தாமிரம் ஆகியவை கணிசமான அளவில் உள்ளது. விட்டமின் B1, B2, B6 ஒன்றாக உள்ள மிகவும் அரிதான பழம் இது’’ “கல்சியம், எலும்புகளுக்கு உறுதியைக் கொடுப்பதுடன், உடலை வலிமையாக்கும். இரத்தத்தைச் சுத்திகரித்து இரத்த விருத்தியடையச் செய்யும். இரத்தசோகைக்கு மிகச்சிறந்த மருந்தே நாவல் பழம்தான். இதிலுள்ள விட்டமின் சி உணவிலிருந்து இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். நாவல் பழத்திலுள்ள ‘ஜம்போலினின்’ எனும் ‘குளுக்கோசைடு’ உடலில் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டைத் தடுக்கிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் நாவல் பழத்தை உணவாக அல்லாமல் மருந்தாக பத்தியமிருந்து 1 மண்டலத்துக்குச் (48 days)சாப்பிட்டு வர, சர்க்கரையின் அளவு குறைந்து கட்டுக்குள் இருக்கும். நாள்பட்ட சர்க்கரை நோய் உடையவர்கள் நாவல் பழ விதையை காயவைத்து பொடியாக்கி, புளித்த மோரில்