Posts

Showing posts from 2015

"ஸஜ்தா " என்னும் சிரம் பணிதல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே

Image
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹூ அல்ஹம்துலில்லாஹ் 🌷 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 ஸஜ்தா" என்னும் சிரம் பணிதல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 தொழுகை என்னும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இறை வணக்கத்தின் ஓர் அங்கமாகிய ஸஜ்தா என்னும் சிரம் பணிதலைச் சிலர் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்குச் செய்கின்றனர். அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்து வணங்குங்கள். (திருக்குர்ஆன் 53:62) இரவில் அவனுக்கு ஸஜ்தாச் செய்வீராக! நீண்ட இரவு அவனைத் துதிப்பீராக! (திருக் குர்ஆன் 76:28) ஸஜ்தா என்னும் சிர வணக்கம் தனக்கு மட்டுமே உரியது, என்று அல்லாஹ் உரிமை கொண்டாடும் போது, பெரியார்களுக்கும், மகான்களுக்கும், இறந்து போன நல்லடியார்களின் கப்ருகளுக்கும், ஸஜ்தாச் செய்கின்றனரே! இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன? மார்க்கம் அறியாத பாமர மக்கள் சிலர் தங்கள் ஆன்மீக வழிகாட்டிகளாகக் கருதும் ஷெய்கு மார்களுக்கு மரியாதை செய்வதாக நினைத்துக் கொண்டு அறியாமையால் அவர்களின் கால்களில் விழுந்து வணங்குகின்றனர். ஸஜ்தா என்னும் சிர வணக்கம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதை அந்தப் பாமர மக்கள் அறியாதிருக்கலாம். தங்க

பெண்களின் உடல்   அலங்காரம் பற்றியது

Image
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல ரஹ்மானை போற்றி ஆரம்பம் செய்கின்றேன். இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக? இங்கே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு? பெண்களின் உடல்                        அலங்காரம் பற்றியது 1. பெண்ணின் உடல் அலங்காரம் : பெண்களின் இயற்கையான பண்புகளோடு தொடர் புள்ளவற்றையே அவளிடமிருந்து எதிர்பார்க்கவேண்டும். நகம் வெட்டுவதும் அதை வழக்கமாக தொடர்ந்து செய்து வருவதும் நபிவழியாக இருக்கிறது. இவை ஹதீஸில் வந்துள்ள மனிதன் இயல்பாகவே செய்யக்கூடிய விஷயங் களாக உள்ளன. நகத்தைக் களைவதால் சுத்தம் ஏற்படு கிறது. அழகு கிடைக்கிறது. அது நீண்டதாக வளர்ந் திருப்பதில் அவலட்சனம் இருக்கின்றது. நகத்தைக் களையாமல் விட்டு விடுவதால் மிகப்பெரிய (தொல்லைகள்) ஏற்படுகின்றன. கோரப் பிராணிகளுக்கு ஒப்பாக (விரல்கள்) ஆம்விடு கிறது. அதற்கு கீழாக அழுக்கு சேர்ந்து விட

பிரார்த்தனைகள்

Image
  பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல ரஹ்மானை போற்றி ஆரம்பம் செய்கின்றேன். இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக? இங்கே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு?                      💓💓💓💓💓💓💓                      பிரார்த்தனைகள்                      💓💓💓💓💓💓💓 நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ ‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூக்கு வதபதில் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’ பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’ (அபூதாவுத்) இந்த நபிமொழியும் பலவீனமானது என அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே, பொதுவாகவே “பிஸ்மில்லாஹ்” என்று கூறித் திறப்பதே சிறப்பாகும். இருப்பினும் மேற்கூறிய துஆவையும் ஒதுவதில் தவறில