வெட்கம் அதன் சிறப்பு, வெட்கப் பண்பைக் கடைபிடிக்கத் தூண்டுதல்

அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்!

வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல அல்லாஹ்வை போற்றி ஆரம்பம் செய்கிறேன்.

இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ( ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக யா அல்லாஹ்!

இங்கே கொடுக்கப்பட்ட தலைப்பு?

❤💟💜💜💖💚💙💛❤💟💜💖💚💙💛
வெட்கம் அதன் சிறப்பு ,
             வெட்கப் பண்பைக்
                           கடைபிடிக்கத் தூண்டுதல்
💛💙💚💖💜💟💟❤💛💙💚💖💜💟❤

வெட்கம் என்றால் அது என்ன என்று சிலர் கேட்பார்கள் ! அது எங்கே விற்கிறது கடைகளில் அது கிடைக்குமா என்று கேட்க்கும் அளவுக்கு ஆகிவிட்டது இன்றைய காலகட்டத்தில் .

வெட்கம் பட்ட காலம் போயாச்சு ! வீதியில் உலா வரும் காலம் இன்று வந்தாச்சு!
ஆணுடன் பெண்கள் கலந்தாச்சு ! ஊர்வலம் ,பேரணி ,ஆர்பாட்டம், இன்னும் பல கூட்டத்தில் நீங்கள் பார்த்தாச்சு !

பாவாடை,தாவணி போயாச்சு ! இப்பொழுது புதிதாக சுடிதார் வந்தாச்சு! வீதியில் உலா வந்தாச்சு! மேல்துப்பட்ட நெஞ்சு மேல் இல்லாமல் ,கழுத்தை சுற்றி புதிய ஸ்டைல் வந்தாச்சு !

ஒரு காலத்தில் வீட்டிலே இருந்த காலம் போயாச்சு ! இப்போ , ஸ்கூட்டியில் உலா வரும்காலம்  நிலைக்கு மாறியாச்சு!

வெட்கம் எந்த அளவுக்கு நன்மை என்பதை நபிமொழிகள் மூலம் நாம் அறியலாம்!

ஹதீஸ்:

ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் : அண்ணல் நபி (ஸல்) அவர்கள் , ஒரு அன்ஸாரித் தோழரின் அருகில் நடந்து சென்றார்கள் .அவர்  தம் சகோதரருக்கு வெட்கத்தின் விஷயத்தில் (வெட்கப்பட வேண்டாம்) என்று உபதேசித்துக் கொண்டிருந்தார் .அப்பொழுது (அங்கு வந்த) அண்ணல் நபி (ஸல்) அவர்கள்  ,, அவரை விட்டு விடுவீராக! நிச்சயமாக வெட்கம் ,ஈமானில் ஒரு பகுதியாகும் என (அவருக்கு) கூறினார்கள்.
                               (புகாரி,முஸ்லிம்)

அண்ணல் நபி (ஸல்) நவின்றதாக ஹஜ்ரத் இம்ரான் பின் ஹுசைன்  (ரலி) அறிவிக்கிறார்கள்: வெட்கம் ,நலவைத் தவிர வேறெதனையும் கொண்டு வராது .
முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் , வெட்கம் அனைத்தும் நலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது .

வெட்கத்தை பற்றி இந்த இரண்டு ஹதீஸ்கள் போதும் என்று நினைக்கிறன் !

நம் பெண் பிள்ளைகளை அதிக வெட்கம் உள்ளவர்களாக அல்லாஹ் ஆக்கி அருள் செய்வானாக !
நம் ஆன் பிள்ளைகளையும் அதிக வெட்க உணர்வு உள்ளவர்களாக ஆக்கி அருள் செய்வானாக ! ஆமீன் ..ஆமீன் ..ஆமீன்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்

அனைவரும் படிக்க வேண்டும் மற்றவர்களுக்கு எத்தி வைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்!

Comments

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்