Posts

Showing posts from March, 2017

ஆணவம் அகங்காரம் பெருமை கொள்ளும் மனிதர்களுக்கு!

ஆணவம் அகங்காரம் பெருமை கொள்ளும் மனிதர்களுக்கு! இன்றைய உலகில் தனது பணத்தாலும், பதவியாலும், பெற்ற படிப்பாலும், பிறந்த குடும்பத்தாலும் பெருமையடிக்கும் பலரை நாம் நமது அன்றாட வாழ்வில் பார்த்து வருகிறோம். இது பலரையும் பீடித்திருக்கும் ஒரு வியாதி என்றால் மிகையில்லை. ஒரு ஏழை தனது மகனின் திருமணத்துக்கு வற்புறுத்தி கூப்பிட்டாலும் அதற்கு செல்லாத சிலர் ஒரு பணக்காரன் அளிக்கும் ஆடம்பர மார்க்கம் அனுமதிக்காத விருந்துகளுக்கு வலிந்து செல்வதை பார்க்கிறோம். அதே போல் தனக்கு நண்பனாக வருபவன் பணக்காரனாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கும் பலரையும் பார்க்கிறோம். இவை எல்லாம் உலக மக்களின் சாதாரண எதிர்பார்ப்புகளாக உள்ளது. இவை எல்லாம் தவறு என்பதை ஏனோ நன்கு விபரம் அறிந்த பலரும் உணருவதில்லை. ஆணவம், அகங்காரம், பெருமையடிப்பது பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை இனி பார்ப்போம். 'நரகவாசிகளைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று நபிகள் நாயகம் கேட்டு விட்டு 'பெருமையும் ஆணவமும் கொண்ட ஒவ்வொருவனும் நரகவாசியே' என்று விளக்கமளித்தார்கள். (அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு நூல் புகாரி 4918, 6072,6657

அன்பின் வேகம் வீரியமிக்கது

[பந்தா - பதவி - பணம் - பவுசுக்காக -] மனிதாபிமானத்தை அடகு வைத்துவிட்டு ஆளாய் பறக்கிற  மக்களை பகல் இரவென்று பாராமல் பம்பரமாய் பணத்திற்காக பரிதவித்து சுற்றிவரும் மக்களை கண்டு அல்லாஹ் சிரிக்கிறான். ஆனாலும் அன்பு செலுத்துகிறான்.] அர்ரஹீம் - இவ்வுலகில் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் ஒன்று போல அன்பு செலுத்தக் கூடியவன் அல்லாஹ். அடியார்கள் மீது என்றென்றும் அருள்பாலித்து வரும் அல்லாஹ் வின் அன்பு அன்னையின் அன்பைவிட நூறு மடங்கு அதிகமானது. அதனால்தான் இன்னும் இன்னும் அடியார்களை மன்னித்துக் கொண்டேயிருக்கிறான். பந்தா - பதவி - பணம் - பவுசுக்காக - மனிதாபிமானத்தை அடகு வைத்துவிட்டு ஆளாய் பறக்கிற ஜனங்களை பகல் இரவென்று பாராமல் பம்பரமாய் பணத்திற்காக பரிதவித்து சுற்றிவரும் மக்களை கண்டு அல்லாஹ் சிரிக்கிறான். ஆனாலும் அன்பு செலுத்துகிறான். உடலில் ஏற்படும் உபாதைகளை நீக்கிட மருந்துண்டு - சுற்று சூழலினால் ஆடைகளில் ஏற்படும் அழுக்கை நீக்கிட சோப்புண்டு. மனிதர்களால் ஏற்படும் துன்பங்களை கசப்புணர்வுகளை நீக்கிட அன்பை தவிர வேறு மருந்தில்லை. தன் மீது குப்பைகளை கொட்டிக் கொண்டேயிருந்த மூதாட்டியை அவள் நோயுற்ற போது அன்பு கொண