சேலம்

பார்க்க வேண்டிய இடம்

இரம்யமான இயற்க்கை சூழல்....!
பசுமை எனும் போர்வை போத்திய இடம்...

இது தான் எங்க ஆத்தூரின் அடையாளமான பெரிய கல்வராயன் மலை....!

கல்வராயன் மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதி. பச்சைமலை, ஜவ்வாது மலைகள், சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவிரி ஆற்று வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன.

1095 சதுர கிமீ பரப்பளவுள்ள இம்மலைகளின் உயரம் 2000 முதல் 3000 அடி வரை உள்ளது.

கல்வராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்க பட்டுள்ளது. வடபகுதி 'சின்னக் கல்வராயன்' மற்றும் தென்பகுதி 'பெரிய கல்வராயன்' என்று குறிபிடபடுகின்றது. 'சின்னக் கல்வராயன்' மலைகள் சராசரியாக 2700 அடி உயரமும், 'பெரிய கல்வராயன்' மலைகள் சராசரியாக 4000 அடி உயரமும் கொண்டவை.

சவ்வாது மலையின் தெற்கு முனையிலிருந்து 40 கிலோமீட்டருக்கு அப்பால் கல்வராயன் மலைத்தொடர் ஆரம்பமாகிறது....

கள்வர் இனத்தவரின் பூர்விக வாழ்விடம் என்பதால் இம்மலை இப்பெயர் பெற்றது.

இம்மலையின் தென்மேற்கு பகுதி #சேலம் மாவட்டத்தின் #ஆத்தூர் வட்டத்திலும் ...

மேற்குப் பகுதி #விழுப்புரம் மாவட்டம் #சங்கராபுரம் வட்டத்திலும்..

வடக்கு திசையில் ஒரு சிறு பகுதியாக #திருவண்ணாமலை மாவட்டத்த்தில் #செங்கம் வட்டத்திலும் அமைந்துள்ளது..

தென்மேற்கில் சேலம் மாவட்டத்தை உள்ளடக்கி மேற்கு தொடர்ச்சி மலையை தொட்டுக் கொண்டுள்ளவாறு கல்வராயன் மலை அமைந்துள்ளது.

வடக்கே #சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே #ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் இம்மலையின் எல்லைகளாக உள்ளன.

கல்வராயன் மலை.இந்த மலைத்தொடர் அதனைச் சுற்றியுள்ள கிழக்குப் பகுதிகளுக்கு வடமேற்கு பருவகாற்றின் மூலமாக அதிக மழைபொழிவை கொண்டு வருகிறது.

கோமுக்கி ஆறு இம்மலையில் இருந்து உற்பத்தியாகி காவிரி ஆற்றுக்கு இணையாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

இந்த மலைதொடரில் யானைகள் அதிகம்...

மேலும் பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன...

ஏற்காடே தோற்றும் போகும் அளவிற்க்கு அழுகு வாய்ந்த இந்த மலையை அரசு கண்டுகொள்ளாமல் போனது ஏனோ.....

மதை்தொடரில் கல்பகனூர், நரசிங்கபுரம் பின்புரம் நீர்வீழ்சியில் வரும் தண்ணீரை சிறிய அணை அமைத்து சேமித்தாலே இந்த பகுதியில் பசுமை மட்டுமே நிறைந்திருக்கும்....

ஆனால் கண்டுகொள்ளாமல் வீணாக நிலத்திற்க்கு பலி கொடுக்கபடுகின்றது....

மேலும் கல்வராயன் மதை்தொடரில் பல ஊர்கள் அமைந்துள்ளன...

அவர்கள் எது என்றாலும் ஆத்தூர தான் வர வேண்டும்....

பட்டிவளவு , நாவலூர் போன்ற மலை கிராமங்கள் ஆத்தூருக்கு நேர் அருகில் உள்ளது ஆனால் அவர்களின் போக்குவரத்து பாதையோ

ஆத்தூர் - ஏத்தாபூர் - தும்மல் - கருமந்துரை வழி 69 km சுற்றி வர வேண்டும்....

ஆனால் ஆத்தூர் - நரசிங்கபுரம் ஆல்லது

ஆத்தூர் - கல்பகனூர் வழியாக பாதையமைத்தால் 35 கிலோமீட்டருக்குள் சென்று விடலாம்...

மேலும் இந்த பகுதியில் பல நீர்வீழ்ச்சிகுளும் இயற்ககை அழகும் கொட்டி கிடக்கின்றன.....

இதனை பாதையமைத்து சுற்றுலா தளமாக அமைத்தால் ஏற்காடு தோற்று போகும்....

ஆனால் இதை பற்றி அரசு ஏதும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்....

அரசு இதனை பரிசீலனை செய்து சுற்றுலாதலமாக மாற்றியமைத்தால் பல ஆயிரம் பேருக்கு வாழ்வாதாரமாக இந்த மலை அமையும்....

அரசின் பார்வைக்கு இந்த பதிவு....

*மழவர்நாடு மழநாட்டு_மலைவளம்*

*அஜ்மல் M.J*

Comments

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்