தலைப்பு

ஓர்  அழகிய  கவிதை

அற்புத வாழ்க்கை

அப்பன்
உயிர்துளி
கொடுத்து..

அம்மை
உயிரை
சுமந்து..

தொப்புள்
கொடி
உயிர் வளர்ந்து..
பத்து மாதம்
கருவறை
இருட்டில்
மூச்சுபயிற்சி
கண்டு
பூமியின்
வெளிச்சத்தில்
வந்து விழும்
குழந்தை

வித்தியாசமான
உருவம்
கொண்டு
வேற்றுமையான
எண்ணம்
கொண்டு
மனிதாபிமான
குணம்
கொண்டு
ஆண்டவன்
விருப்பபடி
நிறம்
கொண்டு

வளர்ந்து
வாழ்ந்து

நல்லதும் கண்டு
கெட்டதும் கண்டு

சுகமும் கண்டு
அவமானமும் கண்டு

ஒவ்வொருவரும்
ஒவ்வொரு
வித்தியாசமான
அனுபவம்
கண்டு

இது தான் உலகம்
இது தான் வாழ்க்கை

இது தான் பாதை
இது தான் பயணம்
என்று

தெளிவதற்குள்ளே
விதி சதி செய்து
இயற்கை
மாற்றம்
கொண்டு

உடலை வளர்த்து
அறிவை வளர்த்து

நட்பை வளர்த்து
எதிர்ப்பை வளர்த்து

கோழையை எதிர்த்து
வீரத்தை வளர்த்து

படிப்பு கண்டோம்
தினமும்
பிடித்த உணவு உண்டோம்

வேலை கொண்டோம்
உழைப்பு கொண்டோம்

பணம் கண்டோம்
திமிர் கொண்டோம்

ஆணவம் கொண்டோம்
அறியாமை கொண்டோம்

ஏளனம் கொண்டோம்..
எளிமை துறந்தோம்

பழைய நிலை மறந்து
பணம் கண்டு புது
வாழ்க்கை
வாழ்ந்தோம்

பணம் கண்டு பாசம்
என்ற வேசம் கொண்டோம்..

மனைவி மக்கள் கண்டோம்..
பேரப்பிள்ளை
கண்டு
பேரின்பம் கண்டோம்..

ஒருநாள்
அப்பன் உயிர்துளி
வெளுத்து சாயம் போக

அம்மை கொடுத்த
உயிர் போக

உணவு உண்டு
வளர்ந்த உடல்
மட்டும்

அனாதையாய்
இடுகாட்டில்
நெருப்பின்
வாயில்போக

பெத்தவளும் வர தயாராக இல்லை..

பெத்தவனும் வர
தயாராக இல்லை ..

உள்ளத்தாலும் உடலாலும் இணைந்து
வாழ்ந்த கட்டிய மனைவியும்
வர தயாராக
இல்லை..

பெத்த சீர்மிகு பிள்ளையும்
வர தயாராக இல்லை..

பேரின்பம் அடைந்த
ஆயிரம் முத்தம் நீ
கொடுத்த பேரப்பிள்ளையும்
உடன் வர
தயாராக இல்லை..

உன்னுடைய
உயிர் போனால்
சகலமும் போனது..

உடல் நெருப்போடு போனது..

பணம் வீட்டோடு
நின்றது ..

பாசம்
சுடுகாட்டோடு
போனது..

கடைசி வரை
யார் வருவார்

என்று
அறியும் ஆற்றல்
எவன் அறிவான்
அகிலத்தில்..

அனுபவத்தோடு
சேர்ந்த
கர்மவினையும்..

பாவமும்
புண்ணியமும்
கடைசி வரை வந்து
சேர்ந்தது..

ஆத்மா மட்டுமே
ஆண்டவனை
அடைந்தது..

சுடுகாட்டு
வெந்தணலில்
ஒரு கை பிடி
சாம்பல் மட்டுமே
மிஞ்சியது..

அறுபது வருடம்
இல்லை
நூறு வருட
வாழ்விற்கு
மிச்சம்..

இவ்வுளவுதான்..
வாழ்க்கையில்..
இப்பூவுலகில்

எதுவும் உடன் வர முடியாது
என்று
தெளிந்த
நமக்குள்
எதற்கு இந்த
கேவலமான
வஞ்சம்
வக்கிரம்
பொறாமை
ஏளனம்
வரம்பு மிறி பேச்சு
தகுதி மிறி ஆசை..
பொறுமையோடும்
எளிமையோடும்
நல்ல எண்ணத்தோடும்
வாழ்ந்தால்
போகும் பாதை
கடைசியில்
மோச்சத்திற்கு
வழி வகுக்கும்..

நாம் வாழும் காலத்தில் 

போட்டி             இன்றி
பொறாமை     இன்றி
காமம்                இன்றி
குரோதம்       காட்டாமல்
களவு           செய்யாமல்
பேராசை   கொள்ளாமல்

அடுத்தவரின் குடியை கொடுக்காமல் 

வாழ கற்றுக்
கொள்ளுங்கள் 

பிறரின் தவறை மன்னித்து பழகுங்கள்  

தன்னிடம் ஆயிரம் கறைகள் 
ஆயிரம் குறைகள்
அவற்றை நீக்க
முயற்சியுங்கள்

பிறரை பழிக்காதீர்கள்

நல்ல வண்ணம்
வாழலாம்

வாழ்வில் வளம்
பெறலாம்

வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்...

அஜ்மல் M.J

Comments

  1. வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது..சூப்பர்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை