விழித்திருந்து கேளுங்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.

வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல ரஹ்மானை போற்றி ஆரம்பம் செய்கின்றேன்.

இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக?

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு?

விழித்திருந்து கேளுங்கள்!

  
ஹஸ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள். தூரிkனா மலையில் ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள், அல்லாஹ்தஆலா நாயனை தரிசிக்க சென்ற போது சில நிஃமத்துக்களை அருட்கொடைகளை அல்லாஹ் தஆலாவிடம் கேட்டார்கள்.

எவ்வாறென்றால், அவர்கள் அல்லாஹ் விடம், யா அல்லாஹ்! உன்னை நெருங்கச் செய்த ருள்வாயாக! என்று கேட்டதற்கு, மூஸாவே! லைல த்துல் கத்ரில் விழித்திருந்து, தொழுகை போன்ற நல்லமல்களில் ஈடுபடுவோர்தான் என்னை நெருங்க முடியும் என்றான் அல்லாஹ்தஆலா நாயன்.

யா அல்லாஹ்! உனது ரஹ்மத்தை அடைய நான் விரும்புகிறேன் என்றார்கள். அதற்கு அல்லா ஹ்தஆலா, லைலத்துல் கத்ரில் ஏழைகள் மீது இரக் கம் காட்டுவோருக்குத்தான் எனது ரஹ்மத் உண்டு என்று சொன்னான்.

* மின்னலைப் போன்று அதிவேகமாக ‘ஸிராத்’ எனும் பாலத்தைக் கடக்கும் பாக்கியத்தை உன்னிடம் கோருகிறேன் என்று நபியவர்கள் கேட்டதற்கு, மூஸாவே, லைலத்துல் கத்ரில் தான, தருமங்கள் (கொடைகள்) கொடுப்போருக்கே அப்பாக்கியம் கிடைக்கும் என்றான் அல்லாஹ்தஆலா.

* யா அல்லாஹ்! சுவர்க்க மரங்களின் நிழலில் இருந்து கொண்டே அதன் கனிகளை உண்ணுவ தற்கு விரும்புகிறேன் என்று நபியவர்கள் கேட்ட தற்கு, லைலத்துல் கத்ரில் ‘ஸ¤ப்ஹானல்லாஹ்’ என்று எவர் என்னை துதி செய்வாரோ அவருக் குத்தான் அவ்வாறு புசிக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுப்பேன் என்று அல்லாஹ் தஆலா கூறினான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்!

அனைவரும் படிக்க வேண்டும் மற்றவர்களுக்கு எத்தி வைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்!

ஸல்லல்லாஹூ அலா முகம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹூ அலா முகம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹூ அலா முகம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்

  

Comments

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்