உம்ரா செய்ய போகின்றோம்

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹிம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.

வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல ரஹ்மானை போற்றி ஆரம்பம் செய்கின்றேன்.

இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக?

அல்ஹம்துலில்லாஹ்!

      என்  அருமை சகோதர, சசோதரிகளே, உற்றார்  உறவினர்கள் மற்றும்  நண்பர்கள், அனைவருக்கும் 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

இன்ஷா  அல்லாஹ்!
         எதிர்  வரும்
  திங்கள்கிழமை  22/6/2015
               ரமழான்  05/1436
அன்று 

இறை  இல்லம்  கவ்பதுல்லாவையும்  இறை  ரஸூல்  ஸல்லல்லாஹு  அலைஹி  வஸல்லம்  அவர்களையும்  தரிசிக்க  கூடிய  பாக்கியத்தை தந்தருள்வாயாக?  (உம்ரா) செய்ய  போகின்றோம்.

நானும்  என்னுடைய  பாச  மிகுந்த  என்  அருமை  உறவினர் 

{அகமது  அலி  கான்
                   ஹாஜா  முகைதீன்}

அவர்களின்  உம்ரா ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்  இன்ஷா  அல்லாஹ்  ! நீங்கள்  அனைவரும்  எனக்காகவும்  அவருக்காகவும்  துஆ  செய்ய  வேண்டும்  இன்ஷா  அல்லாஹ்  !

இன்ஷா  அல்லாஹ்  இது  போல  அல்லாஹ்  உங்கள்  அனைவருக்கும்  உம்ரா  மற்றும்  ஹஜ்  செய்ய  கூடிய  பாக்கியத்தை  தந்தருள்வானாக?

நாங்கள்  இருவரும்  உங்களுக்காக  துஆ  செய்கின்றோம் .

ஆமீன்  ஆமீன்  யா  ரப்பல்  ஆல மீன்

உம்ராவின் அவசியமும் அதன் சிறப்பும்.

863. ''ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ரமலானில் உம்ரா
                 செய்வது ஹஜ்ஜாகும்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களில் ஒருவரிடம்... 'இப்னு அப்பாஸ்(ரலி) அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். நான்
அதை மறந்துவிட்டேன்!" என அவரிடமிருந்து அறிவிக்கும் அதா(ரஹ்) கூறினார்.. 'நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை?' எனக் கேட்டார்கள். அதற்கவர், 'எங்களிடம் இருந்த, தண்ணீர் கொண்டு வருவதற்கான ஓர் ஒட்டகத்தில் இன்னாரின் தந்தையும் அவரின் மகனும் (என்னுடைய கணவரும் மகனும்) ஏறிச் சென்றுவிட்டனர்; இன்னொரு ஒட்டகத்தைவிட்டுச் சென்றுள்ளனர்; அதன் மூலம் நாங்கள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறோம்!" என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ரமளான் வந்துவிட்டால் அதில் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில், ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்!' எனக் கூறினார்கள்; அல்லது அது போன்ற கருத்தைக் கூறினார்கள்.

நூல்: புகாரி - 1782.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆல மீன்

அனைவரும்  படிக்க வேண்டும் மற்றவர்களுக்கு எத்தி வைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்!

ஸல்லல்லாஹூ அலா முகம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹூ அலா முகம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹூ அலா முகம்மது
யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்.

முகம்மது  இப்ராஹீம்  அஜ்மல்

Comments

Post a Comment

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை